Tuesday, 23 October 2012

ஜாமக்காரனின் கட்டுரைத் திருட்டு.


Jamakkaran: வெட்கப்படாமல் அவர்களின் நல்ல செய்தியை மட்டும் எழுதி அறிவிக்க நான் தயங்குவதில்லை

கொஞ்சமும் வெட்கம் கிடையாது என்பது எழுத்தைப் பார்த்தால் தெரியவில்லையா.
அவள், இவள் என்று ஏக வசனத்தில் சகோதரி நக்மாவைத் திட்டியது, வை ... என்றெல்லாம் ஆபாசமாக எழுதியது, ஒன்றை ஒன்பதாய் இட்டுக் கட்டி சொல்வது -இது தான் ஜாமக்காரனின் தொழில். இதிலிருந்து தெளிவாகத் தெரிவது, ஜாமக்காரனுக்கு எந்த கிறிஸ்தவ நற்பண்பும் கிடையாது என்று.அப்புறம் எப்படி திருடுவது தவறென்று தெரியும்? அடுத்தவங்க கட்டுரையை போடுவதற்கு அனுமதி முதலில் வாங்கணும். குறைந்த பட்சம் பெயராவது போடணும். இப்படி ஒரு அடிப்படை நாகரிகம் கூட இல்லை.ஆனால் பிறரை மட்டும் ஆயிரம் குறை சொல்லத் தெரியுது. அப்புறம், இப்படித்தான் மன்னிப்புக் கேட்பதை விட்டு விட்டு , சுப்பிரமண்யம் சாமி மாதிரி சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
Jamakkaran: அதேசமயம் அவருடைய பெயர் குறிப்பிட்டால் ....அவர்களின் மற்ற தவறான உபதேசங்களையும் ...தவறான தரிசன உபதேசத்தையும் வாசகர்களும் பின்பற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன்.
இது என்ன தங்கமலை இரகசியமா? சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைப்பது போல், இவர் பெயர் போடாவிட்டால் யாருக்கும் தெரியாதாமா? பெயர் போட்டால் பிறர் கெட்டுப் போயிடுவாங்க? என்ன ஒரு புல்லரிக்கும் ஞானோதயம். இந்த மாதிரி யோசிக்கும் திறன் யாருக்கு உண்டு? சுப்பிரமண்யம் சாமிக்குத் தான் உண்டு.இப்ப எல்லோருக்கும் தெரிந்து விட்டது, யார் எழுதியது என்று. எல்லாரும் கெட்டுப் போயிட்டாங்களா?? முதலில் உண்மையாய் நடக்கப் பழகுங்க.
Jamakkaran: மேலும் அவர் தன்பத்திரிக்கையில் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட தகவல் வெளிவந்த ஆங்கில பத்திரிக்கையை நானும் அறிவேன்.
தெரியுதில்ல. மொழி பெயர்த்து எழுத வேண்டியதுதான? ஏன் பிறர் உழைப்பைத் திருடணும்? இப்படித்தான் ஆண்டவர் செய்யச் சொல்லியிருக்காரா?
May be he likes cheap negative publicity. அதான் இப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிச்சி பார்க்கிறார் போல.

No comments:

Post a Comment